Friday, November 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும்; இல்லங்கள் தோறும் தீப ஒளி பரவட்டும் – டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு வாழ்த்து!அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இருள் நீங்கி ஒளி பிறந்த இனிய
நாள் இன்று
இன்பம் பொங்கும் தீபாவளி இல்லம் தோறும்
வந்தது
குடும்பத்தோடு ஒற்றுமையாய் கூடிக்
கொண்டாடுவோம்
சந்தோஷம் பெருகட்டும் சிக்கனம்
வாழ்வாகட்டும்
உழைத்துக் கொண்டே இருங்கள் உயர்வு உங்களைத்
தேடி வரும்
ஒரு நாள் வெற்றி நிச்சயம் அது உங்கள்
கையில் தான்
அன்பு எனும் தீபம் ஏந்தி அகம் எங்கும்
தொடங்கட்டும்
தீபங்கள் போல் உங்கள் வாழ்வும் என்றும்
பிரகாசமாகட்டும்
டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு வாழ்த்துகிறார் வாழ்க வளமுடன்.


மலேசியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும், கலைஞர்கள், நண்பர்கள், நிர்வாக ஊழியர்கள், இயக்கத்தின் உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் சிக்கனமாகவும் ,சந்தோஷமாகவும் குடும்பத்துடன் ஒற்றுமையாகவும் இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று மலேசிய மறுவாழ்வுச் சங்கத்தின் தேசியத் தலைவரும், Fast Tech Group of Companies – Managing Director “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான Dato’ Sri Dr Alagesu அவர்கள், அலை ஓசை மீடியா வாயிலாகத் தமது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மலேசிய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி வாழ்த்து!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular