
நாளை நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடவிருக்கும் இனிய தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனத்தின் இந்திய பணியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் மலேசிய இந்துக்களுக்கு தங்களது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஏர் ஆசியா விமான நிறுவனத்தை தேர்வு செய்து வற்றாத ஆதரவை வழங்கி வரும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என இந்த வாழ்த்து செய்தியில் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
படத்தில் (இடமிருந்து வலம்) தொடர்பு பிரிவு அதிகாரி விசித்ரா நடேசன், அரசாங்க உறவுகள் & அனைத்துலக கொள்கைகள் அதிகாரி பிரேம் குமார், ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம், குழும நிறுவனத்தின் செயலாளர் ரூத்ராய்னி கார்த்திகேசு மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுரேஷ் பங்கா.


