
பினாங்கு நவ 2
ஆண்டு இறுதியை முன்னிட்டு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவின் 12 மில்லியன் சலுகை இருக்கைகளுக்கான பிரச்சாரம் பினாங்கில் தொடங்கியது.
130 நகர்களுக்கு சலுகை இருக்கைகளில் பயணிக்க இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பினாங்கு,பாலி,மேடான், புவனேஸ்வர், சிம் ரிப் மற்றும் இன்னும் பல நகர்களுக்கு பயணிகள் இந்து சலுகை இருக்கைகளுக்கு முந்திக் கொள்ளலாம். அதேவேளையில் ஏர் ஆசியா X தனது 17 ஆவது நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆசியாவின் பல நகர்களுக்கு சிறப்பு சலுகை கட்டணங்களை வழங்குகிறது. தைப்பே,சோங்கிங்,நைரோபி,அல்மாட்டி போன்ற நகரங்களுக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 221 முதல் தொடங்குகிறது.

ஏர் ஆசியாவின் இந்த இரட்டை கொண்டாட்டம் இன்றும் நாளையும் பினாங்கு கேர்னி பெரகன் பேரங்காடியில் நடைபெறுகிறது.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பயணிகள் ஏர் ஆசியாவின் பல சலுகைகளை தட்டிச் செல்லலாம். இதனிடையே ஏர் ஆசியா பயணிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி ஃபோல் கேரல் கூறினார்.
இந்த ஆண்டை உற்சாகத்துடன் நிறைவு பெறச் செய்ய இந்த 12 மில்லியன் சலுகை இருக்கைகளை ஏர் ஆசியா வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக பயணம் மற்றும் சுற்றுலாத்துறை முழுமையாக மீட்சி அடைந்துள்ளதால், சுற்று பயணிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு 35.6 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதால், சலுகை இருக்கைகள் பிரச்சாரம் உறுதுணையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


