Thursday, October 8, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தொழில்முறை பணியாளர்களின் சராசரி சம்பளம் RM6,000; சிங்கப்பூரில் SG$7,000 வரை பெறலாம்.

கோலாலம்பூர் அக் 8
2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பதில் அளித்தவர்களில் 94.5 விழுக்காடு பெயர் அதிக சம்பளம் மற்றும் அதிக வருமானத்திற்கான வாய்ப்பு ஆகியவை சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு தங்களை ஈர்க்கும் முக்கிய காரணங்கள் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், மனிதவள அமைச்சர் ஆர். ரமணன், புள்ளிவிவரத் துறையின் 2025 சம்பளம் மற்றும் ஊதிய ஆய்வின்படி, தொழில்முறை பணியாளர்களின் மாதாந்திர சராசரி (median) சம்பளம் RM6,124 என்று தெரிவித்தார்.

ஒப்பிடுகையில், TalentCorp நடத்திய ஆய்வின்படி, சிங்கப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான மலேசிய தொழில்முறை பணியாளர்கள் மாதம் SG$4,001 (RM12,773) முதல் SG$7,000 (RM22,348) வரை சம்பாதிக்கின்றனர்.

அதே ஆய்வின்படி, குறிப்பிட்ட திறன்களும் அனுபவமும் கொண்ட, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் (IT) துறையில் பணிபுரியும் மலேசிய தொழில்முறை பணியாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்தால் SG$10,000 (RM31,926)க்கும் அதிகமாக சம்பாதிக்கக்கூடும்.

அதன்படி, திறன் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு ஏற்ப ஊதிய உயர்வை வழங்க முதலாளிகளை ஊக்குவிக்கும் முற்போக்கான ஊதியக் கொள்கை (Progressive Wage Policy – DGP) மூலம் உள்ளூர் சம்பளத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார். இதற்கு அரசாங்கத்தின் ஊக்கத்தொகைகளும் ஆதரவாக உள்ளன.

இந்தத் திட்டம் மாதம் RM5,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், திறமையான பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை சமாளிக்க, மனிதவள அமைச்சகத்தின் கீழ் உள்ள TalentCorp, வேலைவாய்ப்பு சூழலை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதில் ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) ‘knowledge worker’ திட்டம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் நிபுணர்களை மீண்டும் மலேசியாவுக்கு அழைக்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.

SEZ-ல் செயல்படும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு 15% நிலையான தனிநபர் வருமான வரி விகிதம் விதிக்கப்படுகிறது.

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்களை ஜோகூருக்கு இடம்பெயரச் செய்து, அவர்களின் செயல்பாட்டு செலவைக் குறைப்பதுடன், உள்ளூர் தொழிலாளர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.

ஒப்பிடுகையில், மலேசியாவில் மாதம் RM6,124 என்ற தொழில்முறை பணியாளர்களின் சராசரி சம்பளத்தைப் பெறுபவர்களுக்கு தனிநபர் வருமான வரி விகிதம் 19% ஆகும்.

மேலும், திறமையான நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டம் (Returning Expert Programme), வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசிய தொழில்முறை நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதை ஊக்குவிப்பதற்காக 15% நிலையான வருமான வரி விகிதத்தையும், மேலும் சில சலுகைகளையும் வழங்குகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular