Wednesday, October 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சிறப்பு வாடகை விகிதம் 49 வழிபாட்டுத் தலங்கள், 4 உதவி நிதி பெரும் பள்ளிகள் பயன்-அந்தோணி லோக்

கோலாலம்பூர், அக் 7

ரயில்வே சொத்து கழகம் (RAC) க்கு சொந்தமான நிலங்களில் அமைந்துள்ள 49 வழிபாட்டுத் தலங்கள் மற்றும் 4 உதவி நிதி பெறும் பள்ளிகள் என மொத்தம் மாதம் RM1.00 என்ற சிறப்பு வாடகை விகிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வாடகை விகிதம் 1 அக்டோபர் 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு இந்த சிறப்பு வாடகை விகிதம் வழங்கப்படும். இதற்கு குறிப்பிட்ட தகுதிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

சமூக வளர்ச்சி மற்றும் உள்ளூர் மக்களின் நலனில் முக்கிய பங்காற்றும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆதரிக்கும் வகையில், RAC-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியின் கீழ் இந்த சிறப்பு வாடகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, சிறப்பு வாடகை விகிதத்துடன் 3 ஆண்டுகளுக்கான குத்தகை காலம் வழங்கப்படும். மேலும், அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் + 3 ஆண்டுகள் என நீட்டிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வாடகை விகிதத்திற்கான அறிவிப்பு கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று RAC சென்ட்ரல் டவரில் நடைபெற்றது. போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தகுதியான குத்தகையாளர்களிடம் அறிவிப்பு கடிதங்களை வழங்கினார்.

நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளரும் RAC இயக்குநர்கள் வாரியத் தலைவருமான டத்தோ’ஸ்ரீ ஜனா சாந்திரன் a/l முனியாயன், RAC தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ’ அஸ்ஹார் அஹ்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறுகையில், இந்த சிறப்பு வாடகை நடைமுறை, சமூக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதில் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

“இந்த முயற்சி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுச் சுமையை குறைக்க உதவுவதுடன், சமூகத்திற்கான தங்களது பங்களிப்பு மற்றும் சேவைகளில் அதிக கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

எனினும், சிறப்பு வாடகை வழங்கப்பட்டாலும், குத்தகையாளர்கள் நில வரி, மதிப்பீட்டு வரி, உதவி விகிதத்திற்கான பங்களிப்பு மற்றும் RAC, உள்ளாட்சி அதிகாரிகள் (PBT) அல்லது மாநில அதிகாரிகள் (PBN) விதிக்கும் பிற கட்டணங்களை தொடர்ந்து செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

நிலத்தின் பயன்பாடு தொடர்பான பொறுப்புகள் மற்றும் கடமைகள் முறையாகப் பின்பற்றப்படுவதையும், ரயில்வே சொத்துக்கள் ஒழுங்கான மற்றும் பொறுப்பான முறையில் நிர்வகிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நிலத்தின் பயன்பாடு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யும் வகையில், குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தை மூன்றாம் தரப்பினருக்கு மீண்டும் குத்தகைக்கு விட அனுமதி இல்லை.

சிறப்பு வாடகை விகிதம் வழங்கப்பட்ட நேரத்தில் அந்த நிலம் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் நிலைமை அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட நோக்கத்திற்கேற்ப நிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

இந்த முயற்சியின் மூலம், ரயில்வே சொத்துக்களை நிர்வகிக்கும் தனது பொறுப்பையும், குறிப்பாக உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்கும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கான தேவைகளையும் RAC சமநிலைப்படுத்துகிறது.

இதன் மூலம், அரசாங்கச் சொத்துக்கள் பொறுப்புடனும் ஒழுங்குடனும் நிர்வகிக்கப்படுவதுடன், சமூகத்தின் தேவைகளையும் கருத்தில் கொள்ளும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு RAC தொடர்ந்து ஆதரவளிக்கிறது.
இதன் மூலம் அரசாங்க சொத்துக்கள் பொறுப்புடன் ஒழுங்குடனும் நிர்வகிக்கப்படுவதுடன், சமூகத்தின் தேவைகளையும் கருத்தில் கொள்ளும் மடானி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு RAC தொடர்ந்து ஆதரவளிப்பதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular