Monday, October 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பிரதமர் அன்வர் இப்ராஹிமின் தலைமையில் மலேசியாவின் புதிய பாதை!

கோலாலம்பூர், அக் 5

நம் தாய்நாடு மலேசியா இன்று பல துறைகளில்  முக்கியமான மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு முன்னேறி வருகின்றது. பொருளாதாரம்,தொழில்நுட்பம்,வெளியுறவு சுற்றுச்சூழல், சமூக நீதி என பல தளங்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பசுமை பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, 2026 செப்டம்பர் மாதம் ஷாங்காயில் நடைபெற்ற உலக திறன் மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார். 2026 முதல் 2030 வரை அரசின் பிராந்தியத்தின் பசுமை வேலைவாய்ப்பு திட்டத்தினை வழிநடத்தும் பொறுப்பு மலேசியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் நம் தொழிலாளர்களை பசுமை பொருளாதாரத்திற்கு தயார்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

உள்நாட்டு அரசியல் மற்றும் சட்டம் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (Najib Razak) (SRC International)  SRC இன்டர்நேஷனல் வழக்கில் நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டு மீதமுள்ள தண்டனைக் காலத்தை  (ஆகஸ்ட் 2028 ) வரை வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது ஆசியாவில் மலேசியாவின் மேன்மையான அதிகாரத்தை பாதிக்கும் என விமர்சகர்கள் எழுந்துள்ளன 1MDB தொடர்பான 25 குற்றச்சாட்டுகளில் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீட்டில் உள்ளது.

சமூக பாதுகாப்புக்கு இந்தோனேஷியாவில்  ஆன்லைன் மோசடி சந்தேகத்தில் கைதான 30 மலேசியர்கள் குறித்து உள்துறை அமைச்சர் விசாரணை நடத்தி வருகின்றார்.

இது எல்லை தாண்டிய குற்ற வலையமைப்பு உள்ளதா என்பதை கண்டறிய உதவும்.

இன்று மலேசிய பொருளாதாரம் வளர்ச்சி, பசுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் உலக அரங்கில் முன்னணி வகிக்க முயல்கிறது. அதே நேரம் அகதிகள் பிரச்சனை, சட்டத்தின் ஆட்சி, ஊழல் வழக்குகள் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமையும்.

நம் நாட்டின் ஒரு குடிமகனாக இந்த நிகழ்வுகளை அறிந்து நாட்டின் வளர்ச்சியில் நாமும் பங்கெடுக்க வேண்டும்.

அரசாங்கத்தை குறை சொல்வதை விட்டுவிட்டு “மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதற்கேற்ப நம் நாடு மாறிக்கொண்டே இருக்கின்றது.

மற்ற இனத்தவரின் உரிமைகளையும் மறுக்கமாட்டேன் என பிரதமரின் உறுதி.

UiTM (Universiti Teknologi MARA) பல்கலைக்கழகத்தில் பேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மலாய் இனர்த்தவர்களும் மற்ற சமூகத்தினருக்கும் உத்தரவாதம் அளித்து மலாய் அல்லது இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புக்கும், வசதிக்கும்   பங்கம் விளைவிக்காமல் நிரலை விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மலேசியாவின் அடுத்த பட்ஜெட் 2027, வரும் அக்டோபர் 9, 2026 அன்று நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.  மத்திய பட்ஜெட்டில் பூமிபுத்ரா சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றாலும், இது பிளவுபடுத்தும் அரசியல் அல்ல  சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களையும் உள்ளடக்கிய பூமிபுத்திரா பெரும்பான்மையரின் நலன்களை  ஒதுக்க முடியாது. என்பதால், இது தேசிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்று பிரதமர் விளக்கமளித்தார். இதன் மூலம் அனைத்து இனத்தவர்களின் நலனும் காக்கப்படும் என்ற நம்பிக்கையையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.

திறமைக்கு மதிப்பு- பாரபட்சமற்ற அணுகுமுறை “மற்றவர்களை அவமதிக்கும் அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் கருத்துக்களை நான் விரும்பவில்லை” என்று பிரதமர் கூறியுள்ளார்.

இது இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவரின் திறமைக்கும், உழைப்பிற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular