
விடியலை நோக்கி….!
அன்புள்ள நெஞ்சங்களே….
உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்….
ஊடகத் துறையில் எனது அனுபவத்தை அடிப்படையாக வைத்து எனக்கென ஒரு முத்திரையை பதிக்க புறப்பட்டுள்ளேன்….
நான் தொடங்கியுள்ள இந்த ‘அலை ஓசை’ ஊடகத்திற்கு என்னை தட்டிக் கொடுத்து உதவிக்கரம் நீட்டிய ஒரு உத்தம உள்ளத்திற்கு… உயர்ந்த மனிதருக்கு இவ்வேளையில் எனது இரு கரம் கூப்பி நன்றி நவிழ்கிறேன்….
இது மட்டும் இன்றி பல ஆண்டுகளாக எனக்கு உதவிக் கரம் நீட்டி வரும் அந்த மாமனிதரை நினைவு கூறும் பொருத்தமான தருணம் இது….
சமூகம், பொருளாதாரம், அரசியல், விளையாட்டுத்துறை, சினிமா உலகம் என்ற அனைத்து தரப்பிலான செய்திகளை வழங்குவருக்கும் இந்த ஊடகத்திற்கு உங்களின் ஆதரவு கரங்களை நீட்டுங்கள்…..
இந்த ஊடகம் அனைத்து தரப்பினரையும் ஆதரித்து செய்திகள் வழங்கும் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன் ….
மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்….!
அன்புடன்,
நவநீத கிருஷ்ணன் ரத்தினம்
தலைமை ஆசிரியர்
அலை ஓசை ஊடகம்


