Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சுபாங்கிலிருந்து டென்பசாருக்கு(பாலி) பாத்தேக் ஏர் நேரடி விமான சேவை.

சுபாங் செப் 7
சுபாங்கிலிந்து இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா மையமான டென்பசாருக்கு(பாலி)
பாத்தேக் ஏர் நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து அந்த பிரபல சுற்றுலா தலத்திற்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் முதல் விமான நிறுவனம் இதுவாகும்.
எதிர்வரும் அக்டோபர் 20 ஆம் முதல் இந்த நேரடி விமான சேவை தொடங்குகிறது.
வாரத்திற்கு நான்கு முறை மேற்கொள்ளப்படும் இந்த விமான சேவைக்கு போயிங்
737-800 ரக விமானத்தை பாத்தேக் ஏர் பயன்படுத்துகிறது.
இந்த நேரடி சேவையின் மூலம் அந்த பிரபல சுற்றுலா தலத்திற்கு சுபாங்கிலிரருந்து சுற்றுலா பயணிகள் சிறகடிக்கலாம்.
உலகின் முன்னணி சுற்றுலா தலமாக இந்தோனேசியாவின் பாலித் தீவு விளங்கி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular