
கோலாலம்பூர்,செப் 7
ஆகஸ்ட் 26 அன்று லாங்டாங் லிருங் மலையில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவின் காரணமாக, போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் சேற்று வெள்ளம் பாய்ந்தது. அரசுக்கு ஏற்கனவே அறிவியல் எச்சரிக்கை இருந்தது.
சர்வதேச விஞ்ஞானிகளின் குழு உடனடி மதிப்பீட்டை அரசுக்கு கொடுத்தது. இமயமலை வெப்பமடைதல் இரட்டிப்பாகியுள்ளது, என்று ஆய்வுகள் சொன்னது, நேபால் அரசாங்கம் அதை கவனிக்காமல் சுற்றுலா வருமானத்திற்காக ஆபத்தான ரசவா,திமுரே,சியாப்ருபெசி முதன்மை வர்த்தக மற்றும் சுற்றுலா நகர்ப்பகுதிகளில் சுற்றுலா அனுமதிகளை தொடர்ந்து வழங்கியது.
விளைவு 1,300 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என்றும்,அதில் 51 முதல் 55 மலேசியர்கள் இன்னும் காணவில்லை, 140-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், சுமார் 18 முதல் 29 வரை யிலான அமெரிக்கர்கள் உட்பட 844 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நேபாளப் பகுதியில் இன்னும் தேடப்பட்டு வருகிறார்கள்.
அரசு சுற்றுலா நோட்டீஸ் ரத்து செய்யாமல் பயணிகளை மலைக்குள் அனுப்பியதுதான் இந்த உயிரிழப்பிற்கு நேரடி காரணம்.
நேபாள பேரிடர் முன்னரே தெரிந்தும் தடுக்காதது ஏன்?
அவசரகால எச்சரிக்கை அமைப்புகளை அமைக்கத் தவறியது ஏன்?
விதிமுறைகளை முறையாக அமல்படுத்தாமல் பள்ளத்தாக்கில் வீடுகள், கட்டிடங்கள், குடியிருப்புகள், சுற்றுலா தளங்களை அபாய பகுதிகளில் திட்டமிடல் இன்றி கட்டப்பட்டது தான் மிக முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

விஞ்ஞானிகள் பொறியியலாளர்கள் எச்சரிக்கை கொடுத்ததாக தகவல்.
ஆனால் பணப்பற்றாக்குறை, ஊழல் அரசியல் பாதுகாப்பு பலவீனமான கண்காணிப்பு ஆகியவை சேர்ந்து வீடுகள் பொறியியலாளர் இல்லாமலே எழுந்தன. அதனால்தான் பேரிடர் முன்கூட்டியே தெரிந்தும் தடுக்க முடியாமல் போனது.
இது இயற்கையின் கணிக்க முடியாத சீற்றம் மட்டுமின்றி மனிதர்களின் அலட்சியமான திட்டமிடலும் இப் பேரிடருக்குக் முக்கிய காரணங்கள் ஆகும்.
பேரிடர் நடந்த பிறகும் பொறுப்பற்ற செயல் தொடர்ந்து இந்திய,சீன, அமெரிக்கா, பிரிட்டன்,ஜப்பான்,தென் கொரியா மற்றும் இலங்கை உட்பட்ட பல நாடுகள் மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்த போது நேபாள அரசு “எங்கள் பாதுகாப்பு அமைப்புகளால் முடியும்” என்று சொல்லி அனைத்தையும் நிராகரித்து.
வெளிநாட்டு மீட்பு வேண்டாம், நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை மட்டும் வழங்குங்கள் என்று நேபாள அரசாங்கம் முன் வைத்தார்கள். பேரிடருக்கு பிறகு நேபாள அரசு வெளிநாட்டு மீட்பு வேண்டாம், பண உதவி மட்டும் வேண்டும். பணம் வாங்க தெரிந்த நேபால் அரசுக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கவும் தெரிந்திருக்கவும் வேண்டும்.

மீட்புப் பணியை தாமதம் செய்ததற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது உதவி அல்ல கடமை நேபாள அரசாங்கம் நமது மலேசியருக்கு சன்மானம் வழங்க வேண்டும்.
நமது மலேசியர்களின் உயிருக்கு அவர்களின் குடும்பங்களில் துயரத்துக்கு நேபாள அரசாங்கம் தான் நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும்.
- காணாமல் போன 55 மலேசியர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமும் இழப்பீடும் வழங்க வேண்டும்.
- உயிரிழந்த காயமடைந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் சன்மானமாக இழப்பீடு வழங்க வேண்டும்.
- உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் சிலர் இதை,சிவனின் கோபமா என பேசுகின்றார்கள். கடவுள் இமயமலையை படைத்து விட்டான் இது இயற்கையாக ஏற்பட்ட பேரிடர்.
நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம், சீன அதிகாரிகள் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள், இது பனிப்பாறை உடைவால் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் என்றே விளக்குகின்றார்கள். இமயமலையில் வெப்பநிலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இத்தகைய திடீர் வெள்ளங்கள் அதிகரித்துள்ளன என்பது அவர்களின் கருத்தாகும்.
இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பேரிடர் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தால், உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது,இது சிவனின் குற்றமல்ல.

அலை எழுந்தது இமயத்தில்
செய்தி வந்தது காற்றில் –
பணி உடைந்தது ஆற்றுப் பெருகியது
யார் குற்றவாளி என்று உலகம் கேட்டது
சிலர் சொன்னார் “சிவன் கோபம்”
சிலை மூழ்கிய நீரில் மந்திரம் தேடினர்
நீலகண்டனின் நெற்றிக்கண்
திறந்த தென்று
பயத்தை பத்தியாக்கினர்
ஆனால் கைலாயம் தூரம்
கருணை அருகில் –
சிவன் கோவக்காரன் அல்ல
சிவன் காற்று, நீர் நெருப்பு, மண், வான்
பனிப்பாறை உடைந்தது கோபத்தில்
அல்ல,
வெப்பத்தால் –
நாம் வெட்டிய மரத்தால்,
நாம் தடுத்த ஆற்றால்
நாம் மறந்த மழையால்
அவன் அளிப்பவன் அல்ல, மாற்றுபவன்
அலையோசை அவன் உடுக்கை
வெள்ளம் அவன் நடனத்தின் தாளம்
தாண்டவம் தண்டனை அல்ல
குற்றம் சிவனின் இல்லை
குற்றம் நாம் பேராசையில்
இயற்கையை கோயிலாகப் பார்
சிவனை இயற்கையாகப் பார்
அலையோசை சொல்வது இதுதான்
அழாதே அறி
கோபம் அறி
கோபம் இல்லை,கற்றுக்கொள்
நீர் வடிந்த பின் வேர் நடு
நேபாளத்தில் ஒரு பிரார்த்தனை,
சிவனுக்காக அல்ல
மனிதருக்காக
“இது ‘சிவன் கோபம்’ அல்ல, சைவத்தில் சிவன் என்பது
இயற்கையின் இயக்கம். கோபம் இல்லை; சமநிலை தான்.
பனிப்பாறை உடைவு, காலநிலை மாற்றம் மற்றும் மனிதச்
செயல்கள்தான் காரணம்.இயற்கையை மதித்தால் சிவனை மதித்ததாகும்”.
மக்கள் அலையோசை மிடியவை தொடர்ந்து தொடர்புகொண்டவண்ணமாக இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மேற்கொண்டு, தனது தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும். அதேவேளையில் மலேசியாவின் SMART மீட்புக்குழு கடந்த 5 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு சுபாங் விமானப்படை தளத்திலிருந்து (Subang Air Base) 11 உறுப்பினர் கொண்ட குழு நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் உயிர்களைக் காப்பாற்றி வெற்றியுடன் திரும்பி வர மனமார்ந்த வாழ்த்துகளை மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு தெரிவித்துக் கொண்டார்.


