Friday, November 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏர் ஆசியா பங்குகள் 4.23% உயர்வு-பெகாசஸ் ஏர்லைன்ஸ் உடனான கூட்டான்மையின் தாக்கம்.

கோலாலம்பூர் செப் 4
பெகாசஸ் ஏர்லைன்ஸுடன் ஏர் ஆசியா குழுமம் மேற்கொண்டுள்ள முதல் Codeshare கூட்டாண்மையை தொடர்ந்து, ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் பங்குகள் நேற்று பிற்பகல் வர்த்தகத்தில் 4.23% உயர்ந்தன.
நேற்று மாலை 3.31 மணியளவில், ஏர் ஆசியா குழுமத்தின் பங்கு 3 சென் உயர்ந்து 74 சென்னாக வர்த்தகமானது. மொத்தம் 11.98 மில்லியன் பங்குகள் கை மாறின.
நேற்றைய வர்த்தகத்தில் பங்கு 73 சென்னில் தொடங்கி அதிகபட்சமாக 75.5 சென் வரை உயர்ந்தது.
குறைந்தபட்சமாக 71.5 சென் பதிவானது. முந்தைய வர்த்தக நாளில் 71 சென்னில் முடிவடைந்திருந்தது.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, துருக்கியின் பெகாசஸ் ஏர்லைன்ஸுடனான புதிய Codeshare கூட்டான்மையே காரணம் என கருதப்படுகிறது.

இந்த கூட்டாண்மை யின் மூலம் ஆசியான் மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள ஏர் ஆசியா வலையமைப்பு, இஸ்தான்புல் Sabiha Gokcen அனைத்துலக விமான நிலையம் வழியாக பெகாசஸ் ஏர்லைன்ஸுடனான நிறுவனத்தின் ஐரோப்பிய வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் கட்டம் கட்டமாக ஆசியா-ஐரோப்பா இடையில் நூற்றுக்கும் மேற்பட்ட விமான பாதைகளுக்கான அணுகல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இதன் முதற்கட்டமாக லண்டன், மாஸ்கோ,அங்காரா,சூரிக் மற்றும் ஏதென்ஸ் ஆகிய ஐந்து முக்கிய நகரங்கள் இணைக்கப்பட உள்ளன.
மேலும் கோலாலம்பூர்-இஸ்தான்புல் இடையிலான ஏர் ஆசியா விமான சேவை வாரத்திற்கு நான்கு முறையிலிருந்து பிப்ரவரி 2027 முதல் வாரத்திற்கு 7 முறையாக அதிகரிக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular