Thursday, November 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏர் ஆசியா – துருக்கியின் பெகாசஸ் ஏர்லைன்ஸ் இடையே முதல் கோட்-ஷேர் ஒப்பந்தம்?

கோலாலம்பூர், ஆக 29

ஏர் ஆசியா குழுமம், துருக்கியின் குறைந்த கட்டண விமான நிறுவனமான பெகாசஸ் ஏர்லைன்ஸ் உடன் தனது முதல் கோட்-ஷேர் (Codeshare) கூட்டாண்மையை அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோட்-ஷேர் சேவை, இஸ்தான்புல் சபிஹா கோக்சென் சர்வதேச விமான நிலையம் (SAW) வழியாக பெகாசஸ் இயக்கும் அதிகபட்சம் 5 வழித்தடங்களை உள்ளடக்கியிருக்கலாம் என Business Times தெரிவித்துள்ளது.

அந்த வழித்தடங்கள்:

🇬🇧 இஸ்தான்புல் – லண்டன் ஸ்டான்ஸ்டெட்

🇷🇺 இஸ்தான்புல் – மாஸ்கோ

🇬🇷 இஸ்தான்புல் – ஏதென்ஸ்

🇹🇷 இஸ்தான்புல் – அங்காரா

🇨🇭 இஸ்தான்புல் – சூரிக்

இந்த கோட்-ஷேர் விமானங்கள் 2026 செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், AirAsia X-ன் D7 விமான சேவை மூலம் இயக்கப்படும் கோலாலம்பூர்–இஸ்தான்புல் வழித்தடத்தின் விமான சேவை எண்ணிக்கையை தற்போதைய வாரத்திற்கு 4 விமானங்களிலிருந்து இரட்டிப்பாக்க ஏர் ஏசியா திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டாண்மை மூலம், ஏர் ஆசியா பயணிகள் இஸ்தான்புல்லை இடைநிலையமாகப் பயன்படுத்தி ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு பெகாசஸ் விமானங்கள் மூலம் பயணிக்க அதிக வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், பெகாசஸ் நிறுவனத்துக்கும் ஆசிய சந்தையிலிருந்து கூடுதல் பயணிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular