Monday, September 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பினாங்கு–பாத்தாம்நேரடி விமான சேவை அக்டோபர் 18 முதல்: சுற்றுலா, மருத்துவப் பயணத்திற்கு புதிய வாய்ப்பு!

ஜார்ஜ் டவுன், ஆக 29

இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள் பகுதியிலிருந்து பினாங்கிற்கு சுற்றுலா மற்றும் மருத்துவப் பயணத்தை அதிகரிக்கும் வகையில், Batik Air நிறுவனம் பாத்தாம் (Batam) – பினாங்கு இடையே நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பாத்தாம்–பினாங்கு இடையே தொடங்கப்படும் இந்த புதிய சேவை, இரு நகரங்களுக்கிடையேயான முதல் திட்டமிட்ட நேரடி விமான இணைப்பாகும். வாரத்திற்கு 3 முறை விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரக் குழுத் தலைவர் Wong Hon Wai, இந்த புதிய விமானப் பாதை மூலம் இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள் பகுதியில் உள்ள புதிய சுற்றுலா சந்தையை பினாங்கு அணுகுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

இந்தோனேசியா ஏற்கனவே பினாங்கின் முக்கியமான சர்வதேச சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை Penang International Airport வழியாக 201,657 இந்தோனேசிய சுற்றுலாப் பயணிகள் பினாங்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 192,823 பேர் வந்திருந்த நிலையில், இது 4.58 சதவீத அதிகரிப்பாகும்.

மெடான், ஜகார்த்தா, சுரபாயா மற்றும் பண்டா அச்சே ஆகிய நகரங்கள் இதுவரை பினாங்கின் முக்கிய இந்தோனேசிய சுற்றுலா சந்தைகளாக இருந்தன. புதிய பாதாம் விமான சேவை மூலம் ரியாவ் தீவுகள் பகுதிக்கும் பினாங்கின் சுற்றுலா அணுகல் விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானப் பாதை மருத்துவச் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என Wong Hon Wai கூறினார். பினாங்கில் உள்ள விரிவான மருத்துவ வசதிகள், நிபுணத்துவ சுகாதார சேவைகள் மற்றும் ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ள மருத்துவச் சுற்றுலா கட்டமைப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, ரியாவ் தீவுகளில் இருந்து அதிகமான மருத்துவப் பயணிகளை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விமான இணைப்பு மூலம் பயணிகள் வருகை அதிகரிப்பதுடன், பினாங்கின் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கூடுதல் பலன் கிடைக்கும் என மாநில அரசு நம்புகிறது.

விமான நேரங்கள்:

✈️ Batam → Penang (OD359): காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.55 மணிக்கு பினாங்கு சென்றடையும்.

✈️ Penang → Batam (OD358): காலை 10.10 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு பாத்தாம் சென்றடையும்.

இந்த புதிய சேவைக்கான முன்பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular