
கோலாலம்பூர், செப் 1
அரசின் ஆதரவுடன் மக்களின் கரமும் இணைய வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள். நாட்டின் பிரபலமான ஆன்மீக தலங்களில் ஒன்றான ஜலான் மஸ்ஜித் இந்தியா வீரபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமான பணிகளை இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோ அவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார்.
அன்று காலை ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் கோவிந்த் சிங் டியோவை, ஆலயத் தலைவர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் அமைச்சர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

பின்னர், இரண்டு மாடிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது, ஆலய நிர்வாகத்தினர் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சருக்கு விரிவாக விளக்கம் அளித்தனர்.
இதன்போது பேசிய அமைச்சர் கோவிந்த் சிங் டியோ, ஆலயத் திருப்பணிகள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு சார்பில் முழு ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர் கோவிந்த் சிங் டியோ, இந்த ஆலயம் இந்து சமுதாயத்தின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் என்றும் கூறினார்.
மக்களின் பங்களிப்பு அவசியம், இதனிடையே ஆலய தலைவர் பார்த்திபன் பேசுகையில் அரசாங்கம் நிதி வழங்கினால் நன்றாக இருக்கும்.
இதில் நிலஉரிமையாளர்களின் பங்கு என்ன?
என்ன ஆனது இன்னும் தெரியவில்லை.
இடம் வழங்கியவரின் பங்கு என்னவாயிற்று?
நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட வீரபத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ள நிலம் தனியாருக்கு விற்கப்பட்டதால், கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளாக பக்தர்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் முக்கிய இடமாக இருந்து வரும் இந்தப் பழமையான கோவிலைப் பாதுகாக்க, மாநகர் மன்றம் (DBKL) முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவு நீண்ட பாரம்பரியம் கொண்ட கோவிலைப் பாதுகாப்பதில் மாநகர் மன்றம் (DBKL)முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
நூறு வருடத்திற்கு மேல் இதே இடத்தில் இருந்த வீரபத்திரகாளியம்மன் அம்மன் ஆலயம் இடம் மாற்றம் செய்வது ஒரு கேள்வி குறிதான்?
அதே வேளையில் இரண்டு மாடி ஆலயம் முழுமையாக நிறைவடைய இன்னும் அதிக நிதி தேவைப்படுகின்றது அரசின் உதவியுடன் பொதுமக்களின் நன்கொடையையும் இணைத்தால் மட்டுமே இந்த திருப்பணியை விரைவாகவும் முழுமையாகவும் நிறைவேற முடியும் என்று இலக்கவியல் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்மனின் அருளைப் பெறும் இந்த நல்ல காரியத்தில் அனைத்து பக்தர்களும் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற பங்களிப்பையும் , நில உரிமையாளின் பங்களிப்பும்,அரசாங்கத்தின் பங்களிப்பும் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவும் வழங்க வேண்டும்.
அண்மையில் வரும் தகவலின்படி ஆலய திருப்பணிக்கு அரசாங்கங்களின் சார்பில் இதுவரை எந்தவித மானியமும் வழங்கப்படவில்லை.அதேபோல் நில உரிமையாளர் தரப்பிலும் எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. என்ற கவலைக்குரிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது எனவே, ஆலயத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆதரவை அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டும் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும் அலையோசை மீடியாவின் ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு கேட்டுக்கொண்டார்.
வாழ்க தர்மம்! வளர்க பக்தி!


