
கோலாலம்பூர் ஆக 28
அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பில் வெ11 லட்சம் கையூட்டு பெற்றதாக முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இருப்பினும் மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த குற்றச்சாட்டை மறுத்து மஇகா துணைத் தலைவருமான சரவணன் விசாரணை கோரினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் TYKB Engineering நிறுவனத்திற்கு ஆயிரம் அந்நிய தொழிலாளர்களை தருவிக்க அனுமதி வழங்குவதற்கு வெ11 லட்சம் கையூட்டு பெற்றதாக இவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
2009 எஸ்பிஆர்எம் பட்டத்தின் 16(a)(B) பிரிவின் கீழ் நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
16 ஜூன் 2022-ல் புக்கிட் ஜாலில் கோல்ப் அன் கன்ட்ரி ரிசொர்ட்டில் இவர் வெ150,000 ரொக்கம் பெற்றதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
மேலும் கடந்த 7 ஜூலை 2022-ல் பங்சாரில் வெ350,000 ரொக்கம் மற்றும் வெ597,000 காசோலை பெற்றதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து சரவணன் விசாரணை கூறினார்.
இந்த வழக்கில் சரவணனுக்கு வெ450,000 ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கான தேதி எதிர்வரும் 29 செப்டம்பரில் நிர்ணயிக்கப்படும்.


