
(சுப்பிரமணியம்)
ஜொகூர் பாரு ஆக 28
அண்மையில் நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகாவை பிரதிநிதித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஜொகூர் மாநில மஇகா மற்றும் மாநில புத்ரி பிரிவு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.
மாநில ஆட்சி குழு உறுப்பினராக நியமனம் பெற்ற பன்னீர் செல்வம் மற்றும் துணை ஆட்சி குழு உறுப்பினராக நியமனம் பெற்ற ருகேந்திரன் ஆகியோருக்கு இந்த பிரிவு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டது.
இவர்களின் இந்த வெற்றி ஜொகூர் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு பெரும் பலனை தரும் என எதிர்பார்க்கப்படுவதாக புத்ரி பிரிவினர் கருதுகின்றனர்.


