Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கால்பந்து போட்டி இளம் தலைமுறையின் ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கும் – யுனேஸ்வரன் ராமராஜ்.

சுங்கை பட்டாணி ஆக 28

கால்பந்து போட்டி இளம் தலைமுறையினரிடையே ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதுடன், இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் சிறந்த வாய்ப்பை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

கெடா சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள தேசிய வகை சுங்கை லாயார் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான 12 வயதுக்குட்பட்டோருக்கான டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் கிண்ண கால்பந்து போட்டியின் 8-ஆவது தொடரையும், மகளிர் பிரிவுக்கான டத்தோ பி. சஹதேவன் கிண்ண கால்பந்து போட்டியின் 2-ஆவது தொடரையும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின் துணையமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டி, மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் சக மாணவர்களுடன் இணைந்து செயல்படும் பண்பை வளர்க்கும் தளமாகவும் இஃது அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்கும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.

விளையாட்டில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு, முழு முயற்சியுடன் செயல்படுவதுடன், போட்டிகளின் மூலம் உருவாகும் அனுபவங்களையும் நட்புறவுகளையும் மதித்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் யுனேஸ்வரன் ராமராஜ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular