
கோலாலம்பூர் ஆக
மலேசியாவின் பிரபல சுற்றுலா தலமான கெந்திங் ஹைலண்ட்ஸ் கெந்திங் ஹைலண்ட்ஸ் ஸ்கைஅவென்யூ (Genting Highlands SkyAvenue) வணிக வளாகத்தில் கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நடந்த 2 நிமிட நகைக்கடை கொள்ளை இன்றுவரை நாட்டில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
முகமூடி, தொப்பி மற்றும் ஜாக்கெட் அணிந்த 3 ஆண்கள் கோடாரி மற்றும் சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்து. அவர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை உடைத்து, 5 தட்டுகளில் இருந்த 81 நகைகளை எடுத்துச் சென்றனர். அந்த நகைகளின் மொத்த எடை சுமார் 2.5 கிலோ என்றும், மதிப்பு RM1.747 மில்லியன் (சுமார் RM1.7 மில்லியன்) மதிப்புக்கொண்டவை என பஹாங் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.

கொள்ளை நடந்தது வெறும் இரண்டு நிமிடங்கள் தான். காலை 11.41 மணிக்கு கொள்ளையர்கள் வெளியேறிவிட்டனர். அதே நேரத்தில், கடையில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. காயம் எதுவும் ஏற்படவில்லை. முக்கியமாக, கடைக்கு பாதுகாப்புக் காவலர் யாரும் நியமிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
CCTV காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் கொள்ளையர்கள் சிலாங்கூர், அம்பாங் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு BMW காரில் வந்ததாகத் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் உடனடியாக மதியம் 12 முதல் மாலை 5 மணியளவு வரை தடுப்புச் சாவடியை அமைத்து வாகனச் சோதனையை மேற்கொண்டனர். எனினும், சந்தேக நபர்கள் அதற்கு முன்னரே மலையிலிருந்து தப்பியோடிவிட்டனர் என்று தகவல்?
இன்றுவரை, மூன்று முகமூடிக் கொள்ளையர்களும் கைது செய்யப்படவில்லை. மூன்று முகமூடிக் கொள்ளையர்களையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். என்று இந்த வாரம் முதல், இது தொடர்பான தகவல்கள் செய்திகளில் குறிப்பிடப்பட்டு வருகின்றனர்.

மேலாண்மையின் கவனக்குறைவால் சுற்றுலாப் பயணிகளிடையே அச்சம்?
சம்பவம் நடந்தது Genting Highlands SkyAvenue Mall-இல் உள்ள நகைக்கடையில் தான். காவல்துறையின் எச்சரிக்கையில், அந்தக் கடைக்கு பாதுகாப்புக் காவலர் எவரும் நியமிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் அதிருப்தியும் எழுந்துள்ளன.
மலேசியாவின் முக்கியமானதும் பரபரப்பானதுமான சுற்றுலா SkyAvenue Mall-இல் கொள்ளையர்கள் வெறும் இரண்டு நிமிடங்களில் கொள்ளையை நடத்திவிட்டு தப்பிச் செல்ல முடிந்தது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது?
அதேவேளை, CCTV கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் கொள்ளையர்களை உடனடியாகக் கண்டறிய முடியாதது ஏன்? பாதுகாப்பு அமைப்பு முறையாகச் செயல்படவில்லையா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன?
இத்தகைய சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சம் அதிகரித்தால், எதிர்காலத்தில் அவர்கள் கெந்திங் வரத்தயங்கக்கூடும் என்ற கருத்துகளும் மலாய், தமிழ் மற்றும் சீன ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

SkyAvenue நிர்வாகம் இதுவரை இதுகுறித்து எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், தடயவியல் பிரிவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான CID குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வளவு நல்ல பாதுகாப்பு வசதிகள் கொண்ட முக்கியமான சுற்றுலாத் தளத்திலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியும், தங்களுடைய பாதுகாப்பைப் பற்றிய கவலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக
கெந்திங்க்கு ஏற்ப பாதுகாப்பு போட வேண்டும்.
கெந்திங் மலை மேல் இருப்பதால் வெளியேறும் வழி குறைவு ஒருவழி பாதையாக இருப்பதால் வணிக வளாக நிர்வாகத்துடன் இணைந்து CCTV கேமராக்களை SkyAvenue central control உடன் நேரடி இணைப்பு கொடுக்க வேண்டும்.
மலை ஏறும் , இறங்கும் ஒரே சாலையில் : Number Plate Recognition கேமரா வைத்தல் ஆகிய போன்ற getaway கார்களை உடனே பிடிக்கலாம்.
2 நிமிட திட்ட கொள்ளை இரண்டு நிமிடத்தில் முடிந்தது எனவே Panic Button அழுத்திய முப்பது வினாடிக்குள் மேல் security shutter கீழே இறங்கும் மாதிரி அமைக்க வேண்டும்.
முன் வாசலில் சுடு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நிறுத்த வேண்டும். தமிழ், சீன, மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் பாதுகாப்பு அறிவிப்பு பலகைகள் LED களில் காட்சிப்படுத்த வேண்டும்.
அப்பொழுதுதான் சுற்றுலாப் பயணிகளுக்கு SkyAvenue Mall மேல் நம்பிக்கை வரும். அதேவேளையில், வருங்காலங்களில் இப்படிப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கெந்திங் நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், அலையோசை ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு கேள்வி எழுப்பியுள்ளார்.


