
கோலாலம்பூர், ஆக 26
நமது நாட்டின் 69 வது தேசிய தினத்தை முன்னிட்டு “எங்கேயும் எப்போதும்” எனும் சிறப்பு சுதந்திர தினக் கலைநிகழ்ச்சி வரும் 29 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை இரவு 7.31 மணிக்கு ,
Tapak Aktiviti Pertubuhan Kebajikan Kaum India Dan Badan-badan Gabungan Lorong Lebuh Bandar Utama, Kg. Sg. Kayu Ara, Damansara, 47800 Petaling Jaya என்ற முகவரியில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக என்னை அழைத்துள்ள திரு. எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கும், நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் பண்டிட் டாக்டர் த.மதிவாணன் AMN, PJK,
திருமதி. மல்லிகா, சீராளன் ஜோ ஜோ,
திரு. மாரியப்பன்,திரு.வீர மோகம்,அண்ணாதுரை குடும்பத்தினர், மற்றும் தொண்டூழிய இயக்கம் உறுப்பினர்கள் மற்றும் (SPONSORED BY) மாலா சாமி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் என்னுடன் இணைந்து டத்தோ ஷர்மிளா ஷா ஜெயராஜா ஷா-Financial Director, Fast Tech Group of Companies, டத்தோ மகேன் – Director of Action Fast Security Services,மற்றும் திரு.சிவா– Managing Director Speed Team International Sdn. Bhd. ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறும் இச்சிறப்பு கலைநிகழ்ச்சி, மலேசிய மக்களிடையே ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையிலும்
தேசிய தினத்தின் சிறப்பையும், மலேசியாவின் பல இன மக்களிடையேயான ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இக்கலைநிகழ்ச்சிக்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலைஞர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேராதரவு வழங்க வேண்டும் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கேட்டுக்கொண்டார்.
“எங்கேயும் எப்போதும் மக்கள் பணியில் முன்நின்று செயல்பட்டு வரும் பாடகர் கிருஷ்ணன் அவர்களைப் பொதுமக்களும் கலைஞர்களும் பாராட்டி வருகின்றனர்.”.
மேலும், மக்கள் பணியில் எப்போதும் முன்நின்று செயல்பட்டு வரும் பாடகர் எஸ். கிருஷ்ணன் தலைமைத்துவப் பண்பிலும், இசை மற்றும் பாடல் துறையின் மீதான ஆர்வத்திலும் சிறந்து விளங்கும் கிருஷ்ணன் அவர்கள், திரு. சிவனேசன் மற்றும் திருமதி மகேஸ்வரி ஆகியோருடன் இணைந்து பல்வேறு பாடல் மற்றும் சமூகப் பணிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடல் அலை எவ்வாறு ஓயாமல் கரையைத் தொட்டு மக்களுக்கு அமைதியைத் தருகிறதோ, அதுபோல பாடகர் கிருஷ்ணனும் ஓயாமல் பிறருக்கு பாடல் துறையில் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
பல பாடகர்களுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி முன்னுதாரணமாகத் திகழும் கிருஷ்ணன் அவர்கள் மேலும் பல உயரங்களைத் தொட்டு, தனது கலைப்பணியுடன் சமூக சேவையையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
மடானி அரசாங்கம் இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து, “நாம் அனைவரும் மலேசியர்கள்” என்ற ஒற்றுமை உணர்வு ஒவ்வொருவரின் மனதிலும் மேலும் வலுப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. நமது நாட்டின் அமைதியும், வளர்ச்சியும், எதிர்காலமும் இந்த ஒற்றுமையில்தான் தங்கியுள்ளது.
குறிப்பாக, இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது. அவர்களைப் பொறுப்புள்ள நல்ல குடிமக்களாக உருவாக்குவது பெற்றோர்கள், சமூகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் கடமையாகும். அதேவேளை, இளைஞர்களும் நாட்டின் முன்னேற்றத்தில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
ஒரு நாட்டின் கலைஞர்கள் அந்த நாட்டின் கண்ணாடி போன்றவர்கள். பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களின் மூலம் தேசப்பற்று, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை மக்களிடையே கொண்டு செல்ல முடியும்.
“எங்கேயும் எப்போதும்” என்ற தலைப்பைப் போல, எந்த இடமாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், நாம் அனைவரும் மலேசியாவைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
என அலை ஓசை மீடியா சார்பாக மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வாழ்க வளமுடன்!
வளர்க அவரது புகழ்!
ஒற்றுமையுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம்!
மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!



