Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஓணம் நல்வாழ்த்துகள் – ஒற்றுமையும் மகிழ்ச்சியும் என்றும் நிலவட்டும்.

பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் அவர்கள், மலையாள சமூகத்தினருக்கும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“ஓணம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் ஒற்றுமையை கொண்டு வரட்டும். நமது பன்முகத்தன்மையை தொடர்ந்து கொண்டாடுவோம், ஒற்றுமையை வலுப்படுத்துவோம், அனைத்து மலேசியர்களிடையிலும் மகிழ்ச்சியைப் பரப்புவோம்,” என்று லோக பாலா மோகன் கேட்டுக் கொண்டார்.

“ஒற்றுமையின் முக்கியத்துவத்தை ஓணம் நமக்கு கற்றுத்தருகிறது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார சவால்களையும் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வோம். ஒருவருக்கொருவர் உதவி செய்து, அனைவரும் இணைந்து முன்னேறவும் செழிக்கவும் ஒன்றுபட்டு செயல்படுவோம்,” என்று அவர் தனது ஓணம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

இறைவன் நம் அனைவரையும் அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பால் ஆசீர்வதிக்கட்டும் என்று கூறி, மீண்டும் தனது ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular