
பத்துகேவ்ஸ் ஆக 24
“சமூகத்திற்கு உத்வேகம் அளித்து, வீரர்களை கௌரவித்து, நம்பிக்கை உருவாக்குதல்” என்று கருப்பொருளில், மின்னல்எப்எம் 2026 நேற்று முன்தினம்
“Unsung Heroes” பாராட்டு விழாவை இங்குள்ள ஷெங்கா மாநாட்டு மையத்தில் வெகு சிறப்பாக நடத்தியது.
சமூக வளர்ச்சிக்கு பங்களித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிக்க வகையில் இந்த விழாவில் 20 சமூக தலைவர்கள், மூலோபாய பங்காளிகள் மற்றும் சமூக பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் மின்னல்எப்எம்க்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதும், ஆண்டின் முதல் அரையாண்டு சாதனைகளை பகிர்ந்து கொள்வதும், சமூகத்திற்கு எதிர்பார்ப்பின்றி சிறப்பான பங்களிப்பை வழங்கிய இந்த 20
“Unsung Heroes’ உன் நபர்களை கௌரவிப்பதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
உண்மையான சமூக வீரர்களை எதிர்கால தலைமுறைக்கு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் உருவாக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,”Unsung Heroes’ விருது வழங்குதல் மற்றும் மின்னல்எப்எம்மின் மூலோபாய பங்காளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் ஆகியவையும் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களாக ஒளிபரப்பு இயக்குனர் அஷ்வாட் பின் இஸ்மாயில், கேப்பிட்டல் ஏ குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியும் ஏர் ஆசியா நிறுவனத்தின் ஆலோசகரமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் மற்றும் மின்னல்எப்எம் நிர்வாகி குமரன் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாபெரும் விழாவில் ஏர் ஆசியா நிறுவனத்தின் ஆலோசகர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கலந்து கொண்டது மின்னல்எப்எம் மற்றும் ஆர்டிஎம்-மிற்கு கிடைத்த ஒரு கௌரவம் என அஷ்வாட் பின் இஸ்மாயில் தமதுரையில் கூறினார்.
இந்த விழாவில் டான்ஸ்ரீ டோனியின் வருகை வரலாற்று பூர்வமான ஒன்று என்றார் அவர்.
அனைத்துலக அந்தஸ்தை கொண்ட ஒரு தொழிலதிபர் இந்த விழாவில் கலந்து கொண்டது எங்களுக்கு கிடைத்த ஒரு கௌரவம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கான இப்படி ஒரு விழாவில் டான்ஸ்ரீ டோனியின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டார்.



