Tuesday, August 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சுக்மா 2026 டேக்வாண்டோ போட்டியில் கவிஷா விஜய்குமாரின் வெண்கல வெற்றி – டத்தோஸ்ரீ அழகேசு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் ஆக 18

சிலாங்கூரில் நடைபெற்று வரும் சுக்மா 2026 (SUKMA 2026) விளையாட்டுப் போட்டியில், டேக்வாண்டோ பெண்களுக்கான 46 கிலோ எடைப் பிரிவில் கெடா மாநிலத்தைப் பிரதிநிதித்த வி. கவிஷா விஜய்குமார் வெண்கலப் பதக்கம் வென்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார்.

இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, நாட்டின் முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான சுக்மாவில் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரிய சாதனையாகும்.

கவிஷாவின் இந்த வெற்றி இளம் தலைமுறையினருக்கு சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளதுடன், மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

அவரது எதிர்கால விளையாட்டுப் பயணம் மேலும் சிறக்கவும், தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று கெடா மாநிலத்திற்கும் மலேசியாவிற்கும் பெருமை சேர்க்கவும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சுக்மா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கவிஷா விஜய்குமாருக்கு இந்த வெற்றி கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் டேக்வாண்டோ மீதான அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.அவரது எதிர்காலப் போட்டிகளிலும் மேலும் பல பதக்கங்களை வெல்ல மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular