
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் லோபாக் தொகுதியில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் குமார் சிறந்த வேட்பாளர் என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த தொகுதியில் நன்கு அறிமுகமான குமார், இங்குள்ள மக்களின் சமூக நல தேவைகளை அடையாளம் கண்டு வந்துள்ளார் என்றார் அவர்.
இந்த வட்டாரத்தில் நன்கு அறிமுகமான இவர், பல இயக்கங்களில் இணைந்து சிறப்பான சமூக சேவைகளை நடத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே இந்த தொகுதியில் எதிர் வரும் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் உள்ள மக்களின் சமூக நலன், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் தாம் கவனம் செலுத்த போவதாக அவர் உறுதியளித்தார்.
சமூக நலத்தில் தமது 23 ஆண்டு கால அனுபவம் இந்த தொகுதி மக்களுக்கு பெரும் துணையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தேர்தலில் அரசியல் லாபத்திற்காக தாம் போட்டியிடவில்லை என்றார் அவர்.


