
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் ‘தேசிய முன்னணிக்கே வாக்களிப்போம்’ என்ற இங்குள்ள மக்களின் உறுதிமொழி நமக்கு புதிய நம்பிக்கையை தருவதாக மஇகா உதவி தலைவர் டத்தோ அசோஜன் கூறினார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் அபார வெற்றியின் நீல அலை, நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் வீச தொடங்கி விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மஇகா இழந்த சக்தியை மீண்டும் பெற்று விட்டது என்றார் அவர்.
இந்த நிலையில் அதே உற்சாகத்தில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் 2 தொகுதிகளையும் மஇகா கைப்பற்றும் என அவர் நம்பிக்கை மற்றும்.
இந்த தேர்தலில் ஸ்ரீ தஞ்சோங் மற்றும் சிரம்பான் ஜெயா ஆகிய இரண்டு தொகுதிகளில் கட்சி போட்டியிடுகிறது.
சிரம்பான் ஜெயாவில் கட்சியை பிரதிநிதித்து தேசிய முன்னணி வாக்காளராக முன்னணி வழக்கறிஞர் தினாளன் ராஜகோபால் போட்டியிடுகிறார்.
கடந்த நான்கு தவணைக்காலமாக இந்த தொகுதியை பாக்காத்தான் ஹராப்பான் தற்காத்து வருகிறது.
இந்த தேர்தலில் இந்த தொகுதியை தேசிய முன்னணி வெற்றி கொள்ளும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே வேளையில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியை மஇகா கைப்பற்றும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
இந்திய சமூகத்தின் ஆதரவு மஇகாவிற்கு திரும்ப கிடைத்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.


