Tuesday, September 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நீலாய் மக்களுக்கான புதிய மருத்துவமனை நீலாய் தொகுதியில் தான் நிறுவப்பட வேண்டும்


நீலாய் ஜூலை 21
நீலாய் வட்டார மக்களுக்கான மருத்துவமனை இந்த தொகுதியில் தான் நிறுவப்பட வேண்டும் என எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நீலாய் தொகுதியில் போட்டியிடும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் டத்தோ வி. சரவண குமார் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து மாநில அரசாங்கத்திடம் பல காலமாக தாம் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
500 படுக்கை வசதிகளை கொண்ட இந்த மருத்துவமனை நீலாய் வட்டாரத்தில் கட்டப்படும் என 10 ஆண்டுகளுக்கு முன்பு நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இந்த புதிய மருத்துவமனை பாண்டார் பாரு என்ஸ்டெக்கில் நிறுவப்படும் என நடப்பு மாநில பராமரிப்பு அரசாங்கம் கூறி வருவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர்.
இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் ஏன் தொலை தூரத்தில் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
நீலாய் வட்டாரத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்க நடப்பு மாநில அரசாங்கம் தயார் நிலையில் இல்லை என்பதை இது காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மக்களின் குறைகளை செவிமடுத்து அதற்கான தீர்வை காண்பதே ஒரு மாநில அரசாங்கத்தின் தார்மீக கடமை என அவர் நினைவுறுத்தினார்.
இந்த நிலையில் எதிர் வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தமக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படி இங்குள்ள வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டால், இங்குள்ள மக்களின் குறைகளை மாநில சட்டமன்றத்திற்கு தாம் கொண்டு செல்லப் போவதாக அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular