
சிரம்பான் ஜூலை 18
பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நெகிரி செம்பிலான் மாநிலம் துரித வளர்ச்சி கண்டுள்ளதாக மாநில அரசாங்க பராமரிப்பு அரசாங்கத்தின் ஆட்சி குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் கூறினார்.
மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹமிருடின் ஹருன் தலைமையிலான மாநில சங்கம் மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை இம்மாநில மக்களுக்காக கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எம்விவி டெக்னாலஜி சிட்டியில் இம்மாநில மக்களுக்கு அதிநவீன வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்படும் என நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
எம்விவி டெக்னாலஜி சிட்டியில் இம்மாநில மக்கள் மாபெரும் வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றார் அவர். ஆகையால் விரைவில் நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இம்மாநில மக்கள் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


