Wednesday, November 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி உபசரிப்பில் இந்திய தூதர் கலந்து கொண்டார்.

ஷாஆலம், நவ 11

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் நடத்திய தீபாவளி பொது உபசரிப்பில் இந்திய தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ் கலந்து சிறப்பித்தார்.
தீபாவளி தினமான நவ 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்படு ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்திய தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட அனைத்து பிரமுகர்களுக்கும் தமது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் தீபாவளி கொண்டாடும் அனைத்து மலேசிய இந்துக்களுக்கும் அவர் தமது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular