
நாட்டில் உள்ள தேசிய தமிழ் பள்ளிகளை மூடும் இலக்கை பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் திட்டம் கொண்டிருப்பதாக சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டுவின் அறிக்கை அபத்தமானது என பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் pas DHPP chairman குமரேசன் கூறினார்.
பாப்பாராய்டுவின் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
வாக்காளர்களை குழப்பம் நோக்கில் அடிப்படையற்ற இந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள தமிழ் பள்ளிகளை மூடுவோம் என தாங்கள் கூறியதாக சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினர் வெளியீட்டுள்ள அறிக்கைக்கு ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பப்பாராயிடு உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதே வேளையில் அடிப்படையற்ற இந்த குற்றச்சாட்டுகளை சுமத்திய பாப்பாராயிடு
மலேசிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


