
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களே உள்ளதால், தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் புக்கிட் பாத்து தொகுதியில் போட்டியிடும் குமரனுக்கு ஆதரவாக மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா தலைமையில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களை அடையாளம் காண வீட்டுக்கு வீடு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டத்தோ முருகையா கூறினார்.
கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் மஇகா சொற்ப வாக்குகளில் தோல்வி கண்டதால், இந்த தேர்தலில் புக்கிட் பாத்து தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜொகூர் மாநில தேசிய முன்னணி அரசாங்கம் இங்குள்ள இந்திய சமூகத்தினருக்கு அதிக வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இம்முறை இங்குள்ள இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணி வேட்பாளரான குமரனை நிச்சயம் வெற்றி அடையச் செய்வார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தொகுதியில் இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கான தீர்வுகள் காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தொகுதியில் மொத்தம் 4,268 இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களின் ஒவ்வொரு வாக்கும் நமக்கு மிக அவசியமாகும் என்பதால் தேசிய முன்னணி வேட்பாளரான குமரனுக்கு இங்குள்ள இந்தி வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஜூலை 11 ஆம் தேதி சனிக்கிழமை காலையிலே வாக்குச்சாவடிக்கு செல்லும்படி இங்குள்ள இந்திய வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்தின் மேற்பாட்டிற்கு தாய் கட்சியான மஇகா அதிக மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆகையால் இங்குள்ள இந்திய வாக்காளர்கள் கட்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றார் அவர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பகாங் மாநில மஇகா தலைவரும் சபாய் சட்டமன்ற உறுப்பினருமான வீ. ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்


