
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பிபிசி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா தலைமையில் அக்கட்சியின் தேர்தல் பணி குழுவினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய முன்னணியின் மஹாரானி தொகுதியின் வேட்பாளர் டத்தோ அஸாரிக்கு ஆதரவாக பிபிபி தேர்தல் பணி குழுவினர் மும்முறமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக டத்தோ லோக பாலா கூறினார்.
இந்த தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றியை இங்கு உள்ள இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக இவ் வட்டாரத்தில் உள்ள பிபிபி உறுப்பினர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் சொன்னார்.
இங்குள்ள இந்திய சமூகத்தின் மேற்பாட்டிற்கு மாநில தேசிய முன்னணி அரசாங்கம் அதிக மேற்பாட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.
அதே வேளையில் தேசிய முன்னணியின் தங்கக் வேட்பாளர் டத்தோ ஹாவ் சின் தேக்கை ஆதரித்து பிபிபி தேர்தல் பணியாளர்கள் மும்முறமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களை அடையாளம் கண்டு தேசிய முன்னணி வேட்பாளருக்கு வாக்களிக்கும் படி இவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் உதவி தலைவர் டத்தோ இந்தர் சிங், தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அஜய், மகளிர் அணி தலைவி புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


