
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுரி மொக்தாரை தலைவர் பதவியிலிருந்து விலகும்படி அறிக்கை வெளியிட்டுள்ள சிலாங்கூர் பெர்சாத்து பெர்செக்குத்துவின் உதவி தலைவர் ராஜன் குமார் ரத்னாவை பாஸ் ஆதரவு பேரவை கடுமையாக சாடியது.
‘வீடு தீப்பற்றி எரிவதற்கு முன்னரே எச்சரிக்கை மணி ஒலிக்க வேண்டிய அவசியமில்லை ‘ என செப்பாங் பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் ஸ்ரீ ஜெலராமன் சுழிய ராஜு, ராஜன் குமாருக்கு நினைவுறுத்தினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் தான் கலைக்கப்பட்டுள்ளது, அதற்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் நிர்ணைக்காத நிலையில் ராஜன் குமாருக்கு ஏன் இந்த அவசரம் என்றார் அவர்.
கடந்த சில வாரங்களாக சும்சுரி தலைமறைவாக இருந்து வருவதாகவும், பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என தமது அறிக்கையில் ராஜன் குமார் சாடியுள்ளார்.
இது போன்ற விவகாரங்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்ச மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என ஸ்ரீ ஜலராமன் தெரிவித்தார்.
எந்த ஒரு தரப்பினரும் தங்களின் அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளியிடுவது முறையான செயல் அல்ல என்றார் அவர்.
ஒரு அரசியல் கூட்டணியின் தலைவரை சமூக வலைதளங்களின் வழி பதவி விலகச் சொல்வது முறையான நடைமுறை அல்ல என அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் என்ற நிலையில், தமது கடமைகள் என்ன என்பது சம்சுரி மொக்தாருக்கு நன்றாக தெரியும் என அவர் சொன்னார்.
ஆகையால் சமூக வலைத்தளங்களில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.


