
பேராக் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் மகளிர் பிரிவின் முதலாவது பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் மாநில மகளிர் பிரிவு தலைவி கீதா ராஜூ ஏற்பாட்டில் ஜன 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் புனிதன் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
இதனிடையே முதல் முறையாக தங்களின் ஏற்பாட்டிலான இந்த பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி கீதா ராஜூ கூறினார்.

எதிர் வரும் காலங்களில் இன்னும் அதிகமான சமூக நிகழ்ச்சிகளை நடத்த மாநில மகளிர் அணி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில மகளிர் அணி தங்களால் இயன்ற சேவைகளை மக்களுக்கு வழங்கும் என்றார் அவர்.
இந்த பொங்கல் விழாவை வெற்றி பெற செய்ய ஆதரவு வழங்கிய கட்சியின் மாநில தலைவர் மற்றும் இதர தரப்பினர் அனைவருக்கும் இவ்வேளையில் தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.
இதனிடையே பேராக் மாநில அளவிலான இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி கீதா ராஜூவிற்கு தாம் நன்றி கூறுவதாக கட்சியின் தேசிய தலைவர் புனிதன் கூறினார்.

பொங்கல் விழா நமது இந்துக்களின் பாரம்பரிய கொண்டாட்டமாகும்.
நமது பண்பாடு மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து கட்டி காக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த கொண்டாட்டத்தில் மகளிர் ஒன்றிணைந்து பொங்கலிட்டனர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.


