
ஏர் ஆசியா எக்ஸ்ஸின் சுமார் 10 மணி நேரம் இடைநிறுத்தா விமான பயணத்தைத் தொடர்ந்து துருக்கியின் இரண்டாவது மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்(சபிஹா கொக்சன்) அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைய முடியும்.
இஸ்தான்புல் நகருக்கு சிறப்பை சேர்க்கும் ப்ளூ பள்ளிவாசல்(Blue Mosque)
இஸ்தான்புலில் அமைந்துள்ள இந்த ப்ளூ பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ பெயர் சுல்தான் அஹ்மத் பள்ளிவாசல்.
-உலகப் புகழ்பெற்ற ஒரு வரலாற்று மற்றும் ஆன்மீக சின்னமாக விளங்கி வருகிறது.
-நீல நிற டைல்ஸ்(Blue Tiles). இந்த பள்ளிவாசலின் உட்புறம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட கையால் செய்யப்பட்ட இஸ்நிக்
(Iznik) நீல டைல்ஸ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ‘Blue Mosque’ என்ற பெயர் பெற்றுள்ளது.
-6 மினாரங்கள்(Six Minarets): உலகில் மிகவும் அரிதாக இந்த பள்ளிவாசல் 6 மினரங்களை கொண்டுள்ளது. இது அதன் கட்டிடக்கலை சிறப்பை மேலும் உயர்த்துகிறது.

-பிரம்மாண்டமான குவி மாடங்கள்(Domes): மத்திய குவி மாடம்(Domes) மற்றும் அதனைச் சுற்றியுள்ள அற்புதமான கட்டிட வடிவமைப்பு உருவாக்குகின்ற ஒளி நிறைந்த உள்பகுதி:
260-க்கும் மேற்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் இயற்கை ஒளியை உள்பகுதிக்குள் கொண்டு வந்து ஆன்மீக அமைதியை அளிக்கின்றன.
-ஒட்டோமானிய கட்டிடக்கலை:
ஒட்டோமானிய மற்றும் பைசன்டைன் கட்டிடக்கலை கலவையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.ஹாகியா சோபியாவின் தாக்கம் இதில் தெளிவாக காணப்படுகிறது.
-வழிபாடும் சுற்றுலாவும்:
இன்றும் செயலில் உள்ள பள்ளிவாசலாக இருந்து வரும் இது, வழிப்பாட்டு நேரங்களைத் தவிர, சுற்றுப்பயணிகள் பார்வையிட அனுமதி உள்ளது.

-யுனெஸ்கோ பாரம்பரியம்:
இந்த சுல்தான் அஹ்மத் பள்ளிவாசல் பகுதி யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
-வரலாற்றுப் பின்னணி: 1609-1616 காலகட்டத்தில் ஒட்டோமானிய பேரரசர் சுல்தான் அஹ்மத் 1 அவர்களால் கட்டப்பட்டது.
இஸ்தான்புல் நகரின் ஆன்மீகம், வரலாறு மற்றும் கட்டிட அழகு ஆகிய அனைத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் அற்புத சின்னமே இந்த ப்ளூ பள்ளிவாசல்.
உலகப் புகழ்பெற்ற வர்த்தக மையங்களில் ஒன்றான கிரேண்ட் பஜார்(Grand Bazaar)
-வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கிரேண்ட் பஜார் கி.பி.1461 ஆம் ஆண்டு ஒட்டோமானிய பேரரசர் மெஹ்மத் தி காங்குவரர் ஆல் நிறுவப்பட்டது.
-500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்டுள்ளது.
பரப்பளவும் கட்டமைப்பும்
-60க்கும் மேற்பட்ட தெருக்கள்
-4000க்கும் அதிகமான கடைகள்
-தினமும் லட்சக்கணக்கான மக்கள் குவிக்கின்றனர்
பொருட்களின் பல்வகைத் தன்மை
-தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள்
-துருக்கி கம்பளங்கள் (Turkish Carpet)
-கை நெய்த துணிகள், பட்டு ஆடைகள்
-மண்பாண்டங்கள், விளக்குகள், மசாலா பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள்
கலாச்சார அனுபவம்
-ஒட்டோமானிய கட்டிடக்கலை
-பாரம்பரிய வாணிப முறைகள்
-விலைக்குச் சரக்கு பேச்சு வார்த்தை(Bargaining)
சுற்றுலா பயணிகளுக்கான ஒரு தனி அனுபவம். உலக சுற்றுலா மையம்.
-உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய மூடிய சந்தைகளில் ஒன்றாக இந்த பஜார் விளங்குகிறது
பாரம்பரிய துருக்கி விருந்தோம்பல்
-கடைகளில் துருக்கி தேநீர்(Turkish Tea)
வழங்கி அன்புடன் வரவேற்பது தனிச் சிறப்பு
மொத்தத்தில் கிரேண்ட் பஜார் ஒரு சந்தை மட்டுமல்ல. அது துருக்கியின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வணிக மரபுகளை ஒருங்கிணைத்த ஒரு உயிர்ப்பான அருங்காட்சியகம் என்று தான் கூற வேண்டும்.
இஸ்தான்புல் நகரில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.அனைத்துலக சுற்றுப்பயணிகள் துருக்கியின் ரம்யமான நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் நகரை சுற்றிப் பார்க்க குவிகின்றனர்.
இந்த நகரின் ரம்யமான தட்பவெட்ப நிலை மற்றும் இங்குள்ள மக்களின் அன்பான உபசரிப்பு அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்கிறது .

நன்றி ஏர் ஆசியா
இஸ்தான்புல் முதல் பிரதான பயணத்தில் ஊடகவியாளர்களை அழைத்துச் சென்று அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்த ஏர் ஆசியா எக்ஸ் மற்றும் ஏர் ஆசியா பணியாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.நன்றி ஏர் ஆசியா


