Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஹோப்புள் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் நேர்த்தி நிலை கொண்டாட்டத்தில் துணையமைச்சர் சரஸ்வதி!

பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள தேசிய மாதிரி ஹோப்புள் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் நேற்றி நீரை ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு பிரமுகராக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
தோட்டப் புறத்தில் ஒரு மாளிகை என்று தான் இந்த பள்ளி கூறப்பட்டு வருகிறது.
நேரில் சென்று பார்த்த போது உண்மையில் பெருமை அடையும் வகையில் இந்த பள்ளி செயல்பட்டு வருவதாக சரஸ்வதி கூறினார்.


மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், இப்பள்ளியின் அமைப்பு நிறைவாக இருப்பதாக அவர் பெருமிதம் கொண்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி சுப்பிரமணியம் தலைமையில் இப்பள்ளியின் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்காக மடானி அரசாங்கம் பல வகையில் உதவிகளை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நமது இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். இதன் வழி தான் வளர்ச்சியை முன்னெடுக்க முடியும் என அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular