
ஏர் ஆசியா தனது பணிப் பெண்களுக்கு புதிய சீருடை கொள்கையை அறிவித்தது.
இதன் படி தாங்கள் விரும்பினால் பணி நேரத்தின்போது பணி பெண்கள் ஹிஜாப் அணிந்து கொள்ளலாம்.
ஏர் ஆசியாவின் மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் கலாச்சாரத்திற்கு ஏற்ப இந்த புதிய நடைமுறை அமைந்துள்ளது.
தங்கள் எந்த நகரத்திற்கு சிறகடித்தாலும் இந்த விமான நிறுவனத்தை பிரதிநிதிப்பதில் நம்பிக்கை, சௌகரியம் மற்றும் பெருமை கொள்ளும் வகையில் வேலை இடம் இருப்பதை ஏர் ஆசியாவின் அல்ஸ்டார்கள் உணர வேண்டும் என்பதே ஏர் ஆசியாவின் பிரதான நோக்கமாகும்.

இதனிடையே இந்த புதிய நடைமுறை ஏர் ஆசியாவின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை பிரதிபலிப்பாக ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அனைத்து நிலையிலும் ஏர் ஆசியாவை பிரதிநிதி பதில் பணியாளர்களுக்கு நம்பிக்கையை வளர்க்க இது ஒரு அடித்தளம் என்றார் அவர்.
ஜெட்டா போன்ற தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கான பயணத்தின் போது ஏர் ஆசியாவின் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிவது வழக்கமாக இருந்து வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஏர் ஆசியாவின் இந்த புதிய நடைமுறையின் வழி ஏர் ஆசியாவின் அனைத்து பணிப் பெண்களும் ஹிஜாப் அணிவதை தேர்வு செய்து கொள்ளலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஏர் ஆசியாவின் நிபுணத்துவம் மற்றும் தனித்துவத்தை நிலை நிறுத்த இது போன்ற புதிய நடைமுறைகளை ஏர் ஆசியா அறிமுகப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
‘எங்களின் பலதரப்பட்ட மற்றும் வெளிப்படுத்தன்மையாக பேசும் அல்ஸ்டார்களே ஏர் ஆசியாவின் வலிமைகளில் ஒன்று’ என கேப்பிட்டல் ஏ தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ் கூறினார்.
எங்களின் விமான பணியாளர்கள் இந்த விவகாரத்தை நிர்வாகத்திடம் கொண்டு வந்த போது இதை நாங்கள் முக்கியத்துவம் அளித்து செவிமடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஏர் ஆசியா விமான பணியாளர்களின் சிவப்பு நிற சின்ன சீருடையில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் சொன்னார்.
நிபுணத்துவமாக தைக்கப்பட்ட சிவப்பு நிற ஹிஜாப் மற்றும் கால் சட்டை ஜெட்டா வழித்தடங்களுக்கு செல்லும் விமான பணிப் பெண்கள் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இது ஏர் ஆசியா விமான பணிப் பெண்களுக்கு சௌகரியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே ‘நமது அல்ஸ்டார்கள் பல பின்னணி, கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளை கொண்டுள்ளதால் உலக தர சேவையை வழங்குவதில் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டை நாம் கொண்டிருக்க வேண்டும்’ என ஏர் ஆசியா விமான பணியாளர்கள் இலாகாவின் குழும தலைவர் சுஹாய்லா ஹாசான் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் முக்கிய விமான நிறுவனம் விருதுகளை நாம் பெற்று வருவது இதற்கு சான்றாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய கொள்கை ஏர் ஆசியாவின் வலிமை மற்றும் தொடர் வளர்ச்சியை காட்டுவதாக அவர் சொன்னார்.
எதிர் வரும் 2026 ஆம் ஆண்டில் ராமடான் மாதத்தில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.


