
கோலாலம்பூர் செப் 3
மலேசிய தினத்தை முன்னிட்டு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் ஆதரவோடு கலை, கலாச்சார ராதாகிருஷ்ணன் பைன்ட் ஆர்ட்ஸ் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தாமான் தித்திவங்சாவில் Pesta Budaya Malaysia கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
இந்த கொண்டாட்டம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் என இந்த கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவர் நளினி கூறினார்.
பள்ளி விடுமுறை காலத்தில் இந்த கொண்டாட்டம் நடைபெறுவதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

இந்து 5 கொண்டாட்டத்தில் இந்திய பாரம்பரிய நடனங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக அவர் சொன்னார்.
இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு அம்சமாக கோலாட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கோலாட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நட்பு முறையில் ஆன சிலம்பப் போட்டி நடைபெற உள்ளது. இந்த நட்பு முறை போட்டியில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும் கோலம் போடுதல், பூ கட்டுதல், உறி அடித்தல், காவடியாட்டம் உட்பட இன்னும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அதோடு சேலை இரவு, வேஷ்டி இரவு மற்றும் லேங்கா இரவு போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இந்த 5 நாள் கொண்டாட்டங்களில் பல போட்டிகள் நடப்பு முறையில் நடைபெறவிருக்கிறது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு வெ 5,000, இரண்டாம் பரிசு வெ 3,000 மற்றும் மூன்றாம் பரிசு வெ 1,500 வழங்கப்படும்.
இந்த போட்டிகளில் பங்கு பெறும் அனைவருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சின் முத்திரை பதித்த சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
நாட்டின் புகழ்பெற்ற கலைஞர் டத்தோ எலிகேட் ஆறுமுகம், சந்தேஷ், டார்க்கி, லோக்கப் மற்றும் மண்ணின் மைந்தர்கள் உட்பட பல கலைஞர் பொதுமக்களை மகிழ்விப்பார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
பள்ளி மாணவர்கள், அரசாங்க மற்றும் தனியார் உயர் கல்வி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவர்.
இதில் முக்கிய அம்சமாக மிகப்பெரிய மலேசிய மடானி லோகோ, கோலம் போடப்படும் என நளினி தெரிவித்தார்.
இந்த கொண்டாட்டம் வெற்றிகரமாக நடைபெற தங்களுக்கு ஆதரவு கரம் வழங்கும்படி நன்கொடையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கொண்டாட்டம் தொடர்பாக 0142147963 என்ற கைத்தொலைபேசி எண்ணில் தங்களை தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் இந்த கொண்டாட்ட விழா முத்திரை பதிக்கும் என அவர் சொன்னார்.


