
கோலாலம்பூர் செப் 2
தங்கள் கட்சிகளின் நல்ல எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மஇகா மற்றும் மசீச பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைய வேண்டும் என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
காலம் காலமாக தேசிய முன்னணி கூட்டணியின் விசுவாசமான கட்சிகளான மஇகா மற்றும் மசீச தற்போது அந்தக் கூட்டணியில் வேண்டாம் விருந்தாளியாக இருந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் மஇகா மற்றும் மசீச பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணையும் படி பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் விடுத்துள்ள அறிக்கையை தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தானில் அனைத்து பங்காளி கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து கொண்டு புலம்புவதை விட இவ்விரு கட்சிகளும் பெரிக்காத்தானில் இணைவதே சிறந்த தேர்வு என தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
காலம் காலமாக தேசிய முன்னணி கூட்டணிக்கு விசுவாசமாக இருந்து வரும் இவ்விரு கட்சிகளுக்கு அந்த கூட்டணி மதிப்பளிக்க தவறிவிட்டதாக அவர் சொன்னார்.
ஆகையால் எதிர் வரும் 16ஆவது பொது தேர்தலில் இவ்விரு கட்சிகளும் பெரிக்காத்தான கூட்டணியில் இருந்து போட்டியிடுவது நல்ல முடிவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணியிலிந்து மஇகா விலக வேண்டுமென சில மாநிலங்களைத் தேர்ந்த மஇகா அண்மையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து மஇகா தலைமைத்துவம் விரைவில் ஒரு முடிவு செய்யும் என அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.


