Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புதிய தலைமைத்துவத்திற்கு CFM வரவேற்பு

கோலாலம்பூர் ஆக 15
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக மன்றத்தின் (CFM) 24 ஆவது ஆண்டு பொது கூட்டம் கடந்த 13 ஆகஸ்ட் 2025 வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துறையில் சேவை வழங்குபவர்கள், பயனீட்டாளர் சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் கீழ் இயங்கும் CFM, பயனீட்டாளர்கள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடுநிலையான தளமாகவும், நெட்வொர்க் சாராத புகார்களை தீர்க்கவும், மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துறைக்கான பொது நுகர்வோர் நடைமுறை குறியீட்டின்படி (GCC) பொறுப்பான தொழில் நடைமுறைகளை உறுதி செய்யவும் செயல்பட்டு வருகிறது.


கடந்த 2024 ஆம் ஆண்டு MCMC நுகர்வோர் புகார் தளத்தில் நெட்வொர்க் சாராத புகார்கள் 6 விழுக்காடாக அதிகரித்துள்ளன.
கடந்த 2023-ல் 15,663 புகார்களுடன் ஒப்பிடுகையில் 16,704 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலும் பில் மட்டும் கட்டண பிரிவில் இருந்தாலும்,CFM 94 விழுக்காடு புகார்களை 15 வேலை நாட்களில் தீர்த்து வைத்துள்ளது.
MCMC பயனீட்டாளர் பாதுகாப்பு மையத்தையும் CFM பராமரித்து வருகிறது.
2025-2027 CFM கவுன்சில்
CFM அமைப்பு சட்டத்தின்படி தலைவர் பதவி ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை சேவை வழங்குபவர்கள் மற்றும் பயனீட்டாளர் சங்கங்களுக்கு சுழற்சி வழி வழங்கப்படுகிறது. இதன் கவுன்சில் உறுப்பினர்கள் இருதரப்பிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
-தலைவர்: மலேசியா மொபைல் டெக்னாலஜி சங்கத்தைச் சேர்ந்த யோக் ஹார்
-துணைத் தலைவர் டிஎம் டெக்னாலஜி செர்விசெஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அஜிஸான் அஃபாண்டி
இதர கவுன்சில் உறுப்பினர்கள்:
-Advertising standards Malaysia(ASA)
-International Islamic University Malaysia(IIUM)
-Federation of Malaysian Consumer Association(FOMCA)
-University Telecom(MMU)
-Consumers Association of Miri(CAM)
-Measat Broadcast Network System(ASTRO)
-CelcomDigi communications(CELCOMDIGI)
-U Mobile(U MOBILE)
-TT dotcom(TIME)
-Persatuan Pengguna Melaka(PKPM)
இதனிடையே CFM தலைவராக பொறுப்பேற்றதில் தாம் பெருமை கொள்வதாக யாப் யோக் ஹார் தமதுரையில் கூறினார்.
பயனீட்டாளர் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மலேசியரும் தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தாங்கள் உறுதி செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறையில், பயனீட்டாளர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த CFM தொடர்ந்து முக்கிய பங்காற்றி வரும் என்று அவர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular