
கோலாலம்பூர் ஆக 14
நேரடி அந்நிய முதலீடுகளை கவருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் வலியுறுத்தினார்.
மலேசியா பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக உருமாற இது மிக அவசியம் என்றார் அவர்.
நேற்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசிய திட்டம் மீதான விவாதத்தின் போது அவர் பேசினார்.
அமெரிக்க மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகளின் முதலீடுகளை கவரும் அதே வேளையில், உள்நாட்டு சிறு தொழில் மற்றும் நடுதல் தொழில்துறைகளை கைவிட்டு விடக்கூடாது என அவர் நிறைவு உணர்த்தினார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றார் அவர்.
மலேசிய மக்களின் 80 விழுக்காடு வேலை வாய்ப்புகள் இந்த துறைகளை சேர்ந்தது என அவர் சுட்டிக் காட்டினார்.
அந்நிய முதலீட்டு திட்டங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் பங்கு பெறுவது அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு நிதி உதவி வசதி, வரி விலக்கு உட்பட இதர சலுகைகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த தவறினால் எதிர்காலத்தில் பெரும் விளைவை தாம் எதிர் நோக்கக்கூடும் என அவர் நினைவுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த இந்த 13 ஆவது மலேசிய திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் தெரிவித்தார்.


