
ஜொகூர் பாரு ஆக 13
ஜொகூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மஇகா நகரான்மை கழக உறுப்பினர்களுடன் ஜொகூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ரவீன் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகள் குறித்து அவர் இந்த சந்திப்பில் விளக்கம் தெரிவித்துக் கொண்டார்.
மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடமையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
மக்களுக்கு வழங்கி வரும் சேவையில் அலட்சிய போக்கை கடைபிடிக்கக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.இந்த கூட்டத்தில் ஜொகூர் மஇகா துணைத் தலைவர் நிலா ராஜா உட்பட தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


