Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்து இளைஞர் பேரவையின் சரஸ்வதிக்கு ‘சேவை திலகம்’ விருது

கோலாலம்பூர் ஆக 13
மலேசிய இந்து இளைஞர் பேரவையின் கோப்பேங் பிரிவின் தலைவர் சரஸ்வதி பெரியசாமிக்கு ‘சேவை திலகம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மலேசிய இந்து இளைஞர் பேரவையின் 75 ஆவது வைர விழா கொண்டாட்டத்தில் இவரின் சேவைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
மலேசிய இந்து இளைஞர் பேரவையின் வைர விழா கொண்டாட்டம் கடந்த ஆக 9 ஆம் தேதி தலைநகர் டாக்டர் சித்தி ஹஸ்மா மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சர் அடாம் அடிலி இந்த கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.


நாடு முழுவதும் உள்ள இந்து இளைஞர் பேரவை சேர்ந்த பலருக்கு தங்களின் சேவைகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
மலேசிய இந்து இளைஞர் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக மலேசிய இளைஞர் பேரவையின் தலைவர் முகமட் இஸ்சாத் தமது உரையில் கூறினார்.
இந்திய இளைஞர்கள் சரியான வழித்தடத்தில் செல்ல இந்து இளைஞர் பேரவை முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய இளைஞர்களுக்கு இந்து இளைஞர் பேரவை சிறப்பான திட்டங்களை வழிநடத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இதனிடையே தமக்கு இந்த ‘சேவை திலகம்’ விருது வழங்கிய மலேசிய இந்திய இளைஞர் பேரவையின் தலைவர் ஆனந்த சுப்பிரமணியத்திற்கு தாம் நன்றி கூறுவதாக சரஸ்வதி பெரியசாமி கூறினார்.
சேவை என்பது தன்னலமற்றது. இதை மனப்பூர்வமாக நாம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கோப்பெங் வட்டார மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை தாங்கள் செய்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular