
ஸ்ரீ மஞ்சோங்கிலுள்ள மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்திற்கு துணையமைச்சர் எம். குசேகரன் நேற்று தொழில் நிமித்தம் வருகை புரிந்தார்.
இங்குள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் செஷென்ஸ் நீதிமன்றத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும் என்று குலசேகரன் தெரிவித்தார்.

தற்போது, ஸ்ரீ மஞ்சாங்கில் வசிப்பவர்கள் ஈப்போ மற்றும் பத்துகாஜாவிலுள்ள செஷென்ஸ் நீதிமன்றங்ளுக்குச் செல்வதற்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் இங்குள்ளவர்கள் எதிர்நோக்கும் நேரமின்மை மற்றும் பயணச் செலவு போன்றச் சிக்கல்களைத் தீர்த்துவைப்பதற்கு இந்த அணுகுமுறை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.. .
நீதி பெறுவதற்கான வாய்ப்பு என்பது ஒரு சட்டக் கொள்கை மட்டுமல்ல அது ஒரு அடிப்படை உரிமையுமாகும். வசிப்பிடம் அல்லது சமூகப் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொரு தனிநபரும் நிவாரணம் தேடவும், தங்கள் உரிமைகளைச் செயல்படுத்தவும், சட்டத்தின் கீழ் நியாயமானத் தீர்வைப் பெறவும் உறுதி செய்வதற்கு இது வழிவகுக்கும்.

குற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் துரித வளர்ச்சி கண்டுவரும் மாவட்டமான ஸ்ரீ மஞ்சோங் மக்களுக்கு இது மிகவும் தேவையான ஒன்றாகும்.
ஸ்ரீ மஞ்சுங்கில் ஒரு சுழற்சி அடிப்படையில் செஷன்ஸ் நீதிமன்றம் அமர்வதற்கான திட்டம் ஓர் அர்த்தமுள்ள படியாகும். மேலும் இன்று நடைபெற்ற ஆக்கபூர்வமான விவாதங்கள் தனக்கு மிகுந்த ஊக்குமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குலசேகரனுடன் கூட்டரசு நீதிமன்றத்தின் துணைத் தலைமைப் பதிவாளர் அசானிஸ் தே பின் அஸ்மான் தே; மலாயாவின் கீழ் நீதிமன்றங்களின் பதிவாளர் முகமது மொக்ஸானி பின் மொக்தார்; பேரா நீதிமன்றங்களின் இயக்குநர் மியோர் சுலைமான் பின் அஹ்மத் தர்மிசி மற்றும் பேரா மாநில வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் பாலகிருஷ்ணா பலரவி பிள்ளை ஆகியோருடன் உள்ளூர் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற மூத்த ஊழியர்களும் உடனிருந்தனர்.


