Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சுயமாகத் தயாரித்த பட்டாசு வெடித்ததில் 12 வயது 5 விரல்களை இழந்தான்

தும்பட்டில் சுயமாகத் தயாரித்தப் பட்டாசுகளுடன் விளையாடுபோது அவை வெடித்ததில் 12 வயது 5 விரல்களை இழந்தான்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் தனது இரு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்தது.

பாதிக்கப்பட்டவரின் மற்ற இரண்டு நண்பர்களுக்கும் காயம் ஏற்படவில்லை என்று கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர், தொடர் சிகிச்சைக்காக Raja Perempuan Zainab II மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு தும்பட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது சிறுவனின் உடல்நலம் நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

கிளந்தானில் இதுவரை மொத்தம் 23 பேர் பட்டாசு வெடித்ததில் காயமடைந்து விரல்கள் உடைந்ததாக ஜைனி கூறினார்.

மொத்தத்தில், பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர்  சிகிச்சை பெற்றதாகவும், மேலும் 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular