Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நோன்பு பெருநாளுக்கு 50% டோல் தள்ளுபடி – உண்மையிலேயே சலுகையா? அல்லது போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அரசாங்கத்தின் தந்திரமா?

நோன்பு பெருநாளை முன்னிட்டு அரசாங்கம் டோல் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார். வழக்கமான டோல் கட்டண விகிதத்திலிருந்து 50 சதவீத கட்டணக் குறைப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக டோல் நிறுவனங்களுக்கு 19.69 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் இழப்பீடாக வழங்கவுள்ளது.

மடானி அரசாங்கம் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 29 (சனிக்கிழமை) இரவு 11.59 மணி வரை இந்த 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பை வழங்க ஒப்புக்கொண்டது.

அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி மேலும் கூறுகையில், மக்கள் அவசரப்படாமல் தங்கள் பயணத்தை சிறப்பாக திட்டமிட வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு ஒருபுறம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபுறம் இது போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் தந்திரமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது. விடுமுறை நாட்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் வேறு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? இந்த தள்ளுபடி உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்குமா அல்லது டோல் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமா? என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular