
ஷா ஆலம் மார்ச் 16
ஜசெகவின் புதிய தலைவராக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை தலைவராக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கட்சியின் ஆலோசராக நியமனம் செய்யப்பட்டார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இரண்டாம் தவணையாக கட்சியின் செல்வாக்கு மிக்க பதவியான பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இன்று நடந்து முடிந்த கட்சி தேர்தலில் கோபிந் சிங் அதிக வாக்குகள் பெற்று முதல் நலையை அடைந்தார்.
தாம் மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டால், கட்சியின் தலைமைத்துவத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப் போவதாக அந்தோனி லோக் கூறியிருந்தார்.


