Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – இன்றும் விசாரணை தொடரும்!

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தலைமையகத்தில் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியேறினார்.

ஊழல் மற்றும் பணச்சலவை தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், இஸ்மாயில் சப்ரியிடம் இன்று பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், நாளை (மார்ச் 14) காலை 9.00 மணிக்கு மீண்டும் விளக்கம் தர வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக MACC வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

“அவரின் உடல்நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று MACC வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தமது முன்னாள் நான்கு மூத்த அதிகாரிகள் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக இஸ்மாயில் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, RM170 மில்லியன் ரொக்கம் மற்றும் 16 கிலோ தங்கக்கட்டிகள் (மில்லியன் மதிப்பில்) மீட்கப்பட்டதாக MACC அறிவித்தது. இவை, நான்கு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் மூன்று “பாதுகாப்பு இல்லங்களில்” நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular