Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கான நிலுவை தொகை வழங்கும் நோக்கில் சபுராவுக்கு RM1.1 பில்லியன்!

பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கான நிலுவை தொகையை வழங்கவே சபுராவு எனர்ஜிக்கு 1 .1 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

மாறாக அதன் நிர்வாகிகளை பிணை எடுப்பதற்கு அத்தொகை வழங்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சபுரா எனர்ஜியில் 1.1 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்ட நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

இது சிக்கலில் உள்ள எண்ணெய், எரிவாயு நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளைக் காப்பாற்றுவதற்கும் பிணையில் எடுப்பதற்கும் இத்தொகை வழங்கப்படவில்லை.

பெரும்பாலும் பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையைச் செலுத்துவதற்காக இது வழங்கப்பட்டது.

மலேசியா டெவலப்மென்ட் ஹோல்டிங் வாயிலாக பொது பட்டியலிடப்பட்ட சபுராவிற்கு இந்நிதி செலுத்தப்பட்டது.

சப்புராவிற்கு பணத்தை அனுப்புவது எளிதான முடிவு அல்ல. ஆனால் எண்ணெய், எரிவாயு விநியோகச் சங்கிலியில் நிதி  சிக்கலை தடுக்க இது அவசியமாக இருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular