
குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை (சி.சி.டி.வி.) பொருத்த சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் பொது பாதுகாப்பு நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர் அதனை வலுப்படுத்த எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி காவல்துறை, தீயணைப்புத் துறை
உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
குற்றச் செயல்களை விரைந்து கண்டறிவதற்கு ஏதுவாக முக்கிய இடங்களில் அதிகமான கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தும்படி அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று 15-ஆவது சட்டமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை தொடக்கிவைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்


