Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

2025 உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா தேர்வு

செப்பாங் பிப் 14
2025 உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா எக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா எக்ஸ் மற்றும் தாய் ஏர் ஆசியா எக்ஸ் உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனங்களாக Airline ratings.com அங்கீகரித்துள்ளது.
ஏர் ஆசியா குழுமத்தின் கடுமையான உழைப்பு தான் இந்த அங்கீகாரம் என ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் கூறினார்.
ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் அதையும் கடந்து தரமான விமான போக்குவரத்து சேவைகளை ஏர் ஆசியா எக்ஸ் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரிப்பு கண்டுள்ளது. அண்மைய காலங்களில் இது ஒரு மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும் என்றார் அவர்.
சிறந்த கட்டணத்தில் சிறந்த சேவைகள் வழங்குவதை உறுதி செய்ய அதற்கு தேவையான கடுமையான உழைப்பு தான் இந்த சாதனைக்கு காரணம் என அவர் சுட்டிக் காட்டினார்.
நடுத் தூர மற்றும் நீண்ட தூர விமான பயணங்களின் பயணிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்குவதில் ஏர் ஆசியா எக்ஸ் எப்பொழுதுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூர், சிட்னி மற்றும் மெல்பர்ன் போன்ற விமான நிறுவனங்களில் தனது பிரிமியன் பயணிகளுக்கு சிறப்பு ஓய்வறைகளை ஏர் ஆசியா எக்ஸ் தயார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அனைத்து நட்சத்திரங்களுக்கு ஏர் ஆசியா நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.


இதனிடையே ‘எங்களின் இந்த சாதனைக்கு கடுமையான உழைப்பே காரணம்’ என தாய் ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி தாசாபோன் பிஜ்லெவேட் கூறினார்.
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமானமாக தேர்வு செய்யப்படுவது எளிதான காரியம் அல்ல என அவர் குறிப்பிட்டார்.
அனைத்து நட்சத்திர ஊழியர்களின் தரமான சேவையை இந்த சாதனைக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
கோவிட் 19 தாக்க முதல் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான சவாலை நாங்கள் எதிர்கொண்டு வந்துள்ளோம்.
ஆனால் இறுதியில் உலகின் தலைசிறந்த விமான கிரீடம் எங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி என அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular