
அரசாங்கத்தின் புதிய 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள உத்தரவை பிரெஸ்மா மதிக்கும்.
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை கூறினார்.
தொழிலாளர்களுக்கான 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தை அரசாங்கம் அறிவித்தது.
இப்புதிய சம்பள நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இந்த புதிய குறைந்தபட்ச சம்பள நடைமுறையை பிரெஸ்மா முழுமையாக வரவேற்கிறது.
மேலும் சம்பளம் தொடர்பான அரசாங்கத்தின் ஆலோசனைகளையும் பிரெஸ்மா கடைப்பிடிக்கும்
அதே வேளையில் பிரெஸ்மா தொழிலாளர்களுக்கு மற்ற சலுகைகளும் வழங்கும்.
தொழிலாளர்களுக்கு உணவு, குடியிருப்பு வசதி உட்பட அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் முறையாக வழங்கும் என்று அவர் கூறினார்.
இதனிடையே உணவகத் துறையில் நிலவும் அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும்.
குறிப்பாக மாற்று தொழிலாளர்களுக்கான அனுமதியை அரசாங்கம் உணவகத் துறைக்கு வழங்க வேண்டும்.
இதுவே அரசாங்கத்திற்கான பிரெஸ்மாவின் கோரிக்கை என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.


