
புத்ரா ஜெயா நவ 25
நம் நாடு ஒரு அற்புதமான தேசிய இலக்கியவாதியை இழந்துவிட்டதாக தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
காலஞ்சென்ற டத்தோஸ்ரீ டாக்டர் சாமாட் சைட்டின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு என செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இவரின் படைப்புகள் காலம் காலமாக தொடர்ந்து நினைவு கூறப்படும் என்றார் அவர்.
இவரின் படைப்புகள் பாரம்பரிய சொத்துக்கள் என்பதால், இவர் என்றுமே நமது நினைவில் நிற்பார் என அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 9 ஏப்ரல் 1935 இல் பிறந்த இவர் நேற்று 24 நவம்பர் 2026-ல் காலமானார்.


